புரட்டாசி மாதம் வந்திடுச்சினு வருத்தப்படாதீங்க.. பச்சை பயறை வைத்து “சைவ ஈரல்” வறுவல் செய்யலாம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
133
#image_title

புரட்டாசி மாதம் வந்திடுச்சினு வருத்தப்படாதீங்க.. பச்சை பயறை வைத்து “சைவ ஈரல்” வறுவல் செய்யலாம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

தேவையான பொருட்கள்:-

*பச்சை பயறு – 1/2 கப்

*பச்சை மிளகாய் – 1

*உப்பு – தேவையான அளவு

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பட்டை,கிராம்பு – 3

*சோம்பு – 1/4 தேக்கரண்டி

* கறிவேப்பிலை – 1 கொத்து

*இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி

*சின்ன வெங்காய விழுது – 2 தேக்கரண்டி

*தக்காளி – சிறியது 1

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி’

*கரம் மசால் – 1/2 தேக்கரண்டி

*மட்டன் மசால் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தழை – தேவையான அளவு

*மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

*மிளகு,சீரக தூள் -1/4 தேக்கரண்டி

செய்முறை:-

1.முந்தின நாள் இரவு அல்லது அடுத்த நாள் காலையில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் பச்சை பயறு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

2.அவை நன்கு ஊறி வந்த பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பச்சை பயறு,பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.

3.ஒரு சிறிய அகலமான பாத்திரம் எடுத்து அதில் 2 அல்லது 3 ட்ராப் எண்ணெய் ஊற்றி முழுவதும் அப்ளை செய்து அரைத்து வைத்துள்ள விழுதுகளை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

4.வேக வைத்த பச்சை பயறு கலவை அறிய உடன் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

5.பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை,இலவங்கம்,சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

6.அதில் இஞ்சி,பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் சின்ன வெங்காய விழுது 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு வதக்கவும்.

7.பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு,மிளகாய் தூள்,கரமசால்,மட்டன் மசால்,கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு 1/4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

8.பிறகு சைவ ஈரல் அதாவது வேக வைத்த பச்சை பயறு துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.பின்னர் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுண்டி வரும் வரை கொதிக்க விடவும்.

9.இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.