தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்றும் தமிழர்கள் அழைக்கின்றனர்.
தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது.தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களில் மகரசங்கராந்தி,லோரி,உத்தரயான் என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தின நாளான போகிப்பண்டிகை அன்று வீட்டில் உள்ள பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை தீயில் போட்டு எரித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்த பிறகு சிறுகண் பீளை,ஆவாரம் பூ மற்றும் வேப்பிலை போன்ற மூலிகைகள் வைத்து காப்பு கட்டப்படுகிறது.
மறுநாள் பொங்கல் பண்டிகை அன்று அதிகாலையில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு வீட்டு வாசலை வண்ண கோலங்களால் அலங்கரித்து வீட்டின் முன் கரும்புகளை நிறுத்திவைத்து சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்கப்படுகிறது.ஆடி மாதத்தில் விதைத்த பயிர் தை திங்கள் முதலில் நாளில் அறுவடை செய்யப்படுவதால் உழவர் திருநாளை அறுவடை திருவிழா என்று கொண்டாடுகின்றோம்.புதிய மண் பானை வாங்கி வண்ணங்கள் தீட்டி பானையின் வாய் புறத்தில் மஞ்சள் மற்றும் மாவிலை கட்டி குங்குமம் சந்தனத்தால் போட்டு வைத்து பசும் பால்,பச்சரிசி,வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும்.
விவசாயம் செழிக்க உதவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்நாளில் தங்கள் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை நினைத்து மனதார வழிபட்டால் பிரார்த்தனை கைகூடும் என்பது நம்பிக்கை.