Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?

இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்…

நாம் பெரும்பாலும் எந்த ஒரு பொருள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முக்கியமாக பலருக்கும் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். அவ்வாறு செய்வதால் நன்மை இருக்கிறதா அல்லது தீமை இருக்கிறதா என்று தெரியாமல் நாம் அந்த பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளோம்.

பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நமக்கு நன்மை கிடைப்பது என்பது மிகச் சிறிய அளவு தான். சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு தண்ணீர் குடித்தால் நமது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அந்த சில பழங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கீழே உள்ள பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது.

* ஆப்பிள்
* அன்னாசி
* வாழைப்பழம்
* பப்பாளி
* தர்பூசணி
* மாம்பழம்
* ஆரஞ்சு

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தை சாப்பிட்ட பிறகு எத்தனை பேர் தண்ணீர் குடிப்பீர்களோ அவர்கள் அனைவரும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆப்பிள் பழத்தில் நன்மை செய்யக் கூடிய சத்துக்கள் இருப்பினும் ஆப்பிளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நமக்கு தீமை ஏற்படும். அதாவது ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த பெக்டின் நார்ச்சத்து நாம் ஆப்பிளை சாப்பிடவுடன் தண்ணீர் குடிப்பதால் நமது வயிற்றில் வீக்கம் மற்றும் மந்தமான உணர்வை ஏற்படுத்தும்.

அன்னாசி பழம்…

அன்னாசி பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு தண்ணீர் குடித்தால் அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன்(Bromelain) என்ற வேதிப் பொருள் நமக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை இது ஏற்படுத்தும்.

வாழைப்பழம்…

வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு நன்மை தரக் கூடிய மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத்தை சாப்பிடதுடன் விடாமல் நாம் தண்ணீர் குடித்தால் நமக்கு நன்மையை அளிக்கும் மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நமது உடல்நலத்தை பாதிப்படைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

பப்பாளி

பப்பாளி பழமானது பல நோய்களுக்கு தீர்வு காணும் மருந்தாக உள்ள நிலையில் இதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அதுவே பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். அதாவது பப்பாளி பழத்தில் பப்பயன்(Papain) என்ற வேதிப் பொருள் உள்ளது. நாம் பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் இந்த வேதிப்பொருள் நமக்கு வயிற்று போக்கை ஏற்படுத்தும். மேலும் வயிறு மந்தமாக இருக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

தர்பூசணி

உடலுக்குத் தேவையான அதிகளவு நீர்ச்சத்துக்களை தரக்கூடியது தர்பூசணி பழம் ஆகும். இந்த தர்பூசணி பழத்தை நாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் தர்பூசணியில் ஏற்கனவே உள்ள நீர்ச்சத்துக்கள் நமது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நமக்கு செரிமானப் பிரச்சனையையும் இது ஏற்படுத்தும்.

மாம்பழம்

மாம்பழத்தில் என்னற்ற வகையான நன்மை தரக்கூடிய சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் மாம்பழத்தில் உள்ள என்ஸைமஸ் என்ற வேதிப் பொருள் நமது செரிமான அமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை நாம் சாதாரணமாக சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பிறகு தண்ணீர் மட்டும் குடிக்கக் கூடாது. ஏன் என்றால் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு அமிலத்தன்மை உள்ளது. நாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் நமக்கு இது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.

Exit mobile version