Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

#image_title

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது.

மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் உள்ளிட்டவை தான் அதிகம் இருக்கும்.ஆனால் கூகுளில் எது பற்றி தேடினாலும் கிடைக்கும் என்பதினால் நாம் சட்டத்திற்கு விரோதமான தகவல்களை தேடினால் நிச்சயம் ஜெயில் உறுதி.

கூகுளில் நாம் தேடவே கூடாதவை என்னென்ன?

*நம் உடல் நலம் தொடர்பான தகவல்களை நாம் கூகுளில் தேடுவதை தவிர்க்கவும்.கூகுளில் தரப்பட்டுள்ள தகவலின் படி சுய மருத்துவம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

*எந்த ஒரு நிர்வாகம் அல்லது நிறுவனத்தின் வாடிக்கையாளர் குறித்த சுய விவரங்களை கூகுளில் நாம் தேட கூடாது.காரணம் நாம் தேடும் வாடிக்கையாளர் பெயரில் பல போலி தகவல்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

*அதேபோல் எந்த ஒரு நாட்டின் இணையதள முகவரியை கூகுளில் தேடுவதை தவிர்க்கவும்.அதேபோல் ஒரு நாட்டின் ராணுவம் தொடர்பான ரசியத் தகவல்களை தெரிந்து கொள்ள ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள்.இவை சட்டப்படி குற்றமாகும்.

*அதேபோல் அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரிகளை கட்ட கூகுளில் உள்ள லிங்க்கை நாம் பயன்படுத்த கூடாது.காரணம் அரசாங்கம் பெயரில் பல்வேறு போலி இணையதள லிங்க் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

*உங்கள் வங்கி தொடர்பான எந்த ஒரு தகவலையும் கூகுளில் தேடாமல் இருப்பது நல்லது.உங்க வங்கி கணக்கு எண்ணை கூகுளில் உள்ள எந்த ஒரு லிங்க்கிலும் பதிவு செய்ய கூடாது.காரணம் வங்கி ஒருபோதும் உங்கள் தகவல்களை ஆன்லைன் வழியாக கேட்காது.அதேபோல் உங்க வங்கி பெயரில் வரும் லிங்க் மற்றும் தெரியாத வெப்சைட் லிங்க்கை கிளிக் செய்வதை முற்றலும் தவிர்க்கவும்.இதனால் நம் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடு போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

*ஹேக்கிங் எப்படி செய்வது? ஒரு நாட்டின் தொழில் நுட்பத்தை எப்படி ஹேக் செய்வது போன்றவற்றை கூகுளில் ஒருபோதும் தேட கூடாது.இது சட்டப்படி குற்றமாகும்.இதனால் நீங்கள் கைது செய்யப்பட்டு விடுவீர்.

*அதேபோல் தற்கொலை செய்து கொள்வது எப்படி? கொலை செய்வது எப்படி? வெடி மருந்து,துப்பாக்கி தயாரிப்பது எப்படி? வங்கியில் கொள்ளை அடிப்பது எப்படி? உள்ளிட்ட எந்த விஷயங்களையும் கூகுளில் தேடவே கூடாது.

*கூகுளில் ஒருபோதும் உங்கள் சுய விவரத்தை பதிவு செய்ய கூடாது.இதனால் நீங்கள் மோசடியில் சிக்க வாய்ப்பு உள்ளது.அதேபோல் உங்கள் மொபைல் போலி இணையதளம் மூலம் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

Exit mobile version