“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்!
தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். இந்நிலையில் பருவமழை வருவதையொட்டி திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில், இந்த வட கிழக்கு பருவமழையானது சென்ற மாதம் 24 ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
இதனால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. இந்த பருவமழையின் தாக்கமானது நாளை முதல் அதிக அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரிவர செய்யாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது மழைநீர் சேகரிப்பு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். அவர் வழியே வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் குடிமராத்து திட்டம் அதாவது ஏரிகளை தூர்வாரும் திட்டத்தை கொண்டு வந்து மக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்தினார்.
இதனால் மக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி, பருவ மழை காலங்களிலும் கூட இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் இருந்தது. ஆனால் தற்பொழுது திமுக அரசு இதனை சரிவர செயல்படுத்தாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மழை நீரை வீணாக்கவிட்டு கடலில் கலக்கும் நிலையை திமுக அரசு கொண்டு வந்து விட்டது. இதை வைத்து பார்க்கும் பொழுது நீர் மேலாண்மை குறித்து எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு தற்போது வரை கொண்டு வரவில்லை.
மழை நீரை சேகரிப்பதால் நிலத்தடி நீரும் உயரும், மேலும் பருவமழை அடுத்து வரும் கோடை காலங்களில் சேகரிக்கும் நீர் விவசாய மக்களுக்கு பெரிதும் உதவும். ஆனால் தற்பொழுதே திமுக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்து உள்ளது. முன்பு எடப்பாடி இருந்த பொழுது நீர் மேலாண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. தொடர்ந்து பயிர் சாகுபடியிலும் கூட தமிழ்நாடு முதலிடத்தை வகித்தது. இது அனைத்தும் குடிமராத்து திட்டத்தில் தான் நமக்கு கிடைத்தது.
ஆனால் தற்பொழுது வரை திமுக அரசு குடிமராத்து திட்டத்திற்கு பட்ஜெட் என்று எதுவும் ஒதுக்கப்படவில்லை. இது விவசாயிகளுக்கு நாளடைவில் பெரும் விளைவைக் கொண்டு வந்து விடும். பருவமழையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் எதுவும் கொண்டு வராத திமுக அரசு தற்பொழுது குடிமராத்து திட்டத்தை மட்டும் செயல்படுத்துமா? என்று ஆர் பி உதயகுமார் எதிர்க்கட்சி இடையே கேள்வி கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி திமுக வானது,ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கிவிட்டது.அதை வைத்து பார்க்கையில் இவர்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளதா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.