நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

0
208

நீங்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கடவுள் இவர்கள் ரூபத்தில் கூட உங்களிடம் வருவார்!

ஒரு மனிதன் உண்ண  உணவில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை கேட்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சுயமரியாதையை விடுத்து ஒரு மனிதன் சக மனிதனிடம் பிச்சை கேட்பது என்பதன் பொருள் அவர்கள் அவர்களுடைய பாவத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இதுவே அவர்கள் சன்னியாசியாக இருக்கும் பொழுது பிச்சை எடுத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களிடம்  பிச்சை கேட்டு வரும் பொழுது அவர்களை மரியாதை குறைவாக நடத்துவது என்பது பாவ செயலாகும் அதனால் அவ்வாறு ஒருபோதும் செய்யக்கூடாது. உங்களிடம் வந்து கோவில் கட்டுவதற்கு பணம் கேட்டால் அது எங்க கட்டப்படுகிறது அந்த தகவல் உண்மையா என எண்ணி நீங்கள் அவர்களை விரட்டி அடிக்க கூடாது.

ஒருவர் உங்களிடம் பிச்சை கேட்டு வந்தால் உங்களால் முடிந்ததை அவர்களுக்கு செய்யுங்கள். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் அல்லது முதியவர்களின் வடிவில் கூட கடவுள் உங்களை சோதிப்பதற்காக பிச்சை கேட்பது போல் வருவார் என்பது ஐதீகம். அதனால் அவர்களை ஒருபோதும் மதிக்காமல் இருக்க வேண்டாம் என முன்னோர்கள் கூறுகின்றனர். ஆகையால் உங்களிடம் பிச்சைக்கேற்ற வருபவர்களிடம் மரியாதையுடனும் , பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.