இட்லி பொடி எப்படி செய்யறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க! உங்களுக்கான செய்முறை விளக்கம் இதோ!!

0
61
#image_title

இட்லி பொடி எப்படி செய்யறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க! உங்களுக்கான செய்முறை விளக்கம் இதோ!!

நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடிப்பது இட்லி,தோசை தான்.இந்த இட்லி தோசைக்கு ஏற்ற சிறந்த காமினேஷன் இட்லி பொடி.நம்மில் பலருக்கு பேவரைட்டாக இருக்கும் இந்த இட்லி பொடியை மிகவும் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை உளுந்து – 1/4 கப்

*சனா பருப்பு – 1/4 கப்

*காஷ்மீரி சில்லி – 10

*வர மிளகாய் – 15

*கடுகு – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

* எள் – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை அளவு

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு கடாய் வைத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வர மிளகாய் மற்றும் காஸ்மீரி சில்லி சேர்த்து வதக்கவும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு மாற்றவும்.

2.பின்னர் அந்த கடாயில் மீண்டும் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுந்து 1/2 கப் சேர்க்கவும்.பொன்னிறத்திற்கு வந்ததும் அவற்றை மிளகாய் வைத்துள்ள தட்டிற்கு மாற்றவும்.

3.பிறகு அதே கடாயில் முதலில் சனா பருப்பு சேர்த்து வறுத்து பின்னர் எள் சேர்த்து 1 முதல் 1 1/2 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.பின்னர் தீயை அணைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2 சிட்டிகை அளவு பெருங்காயப்பொடி சேர்த்து கொள்ளவும்.

4.பின்னர் வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவைக்க வேண்டும்.

5.ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் மிளகாய் சேர்த்து அரைக்கவும்.பின்னர் மீதமுள்ள பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

6.பிறகு அரைத்து வைத்துள்ளவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் ஆற விடவும்.

7.இதை காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து கொள்ளவும்.இந்த இட்லி பொடியில் 1 தேக்கரண்டி எடுத்து அதில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இட்லி,தோசைக்கு பரிமாறவும்.