முகப்பருக்களை மறைய வைக்க என்ன செய்வது என்று தெரியவில்லையா!!? இதோ சில அருமையான டிப்ஸ்!!!
நமது முகத்தின் அழகை கெடுக்கும் முகப்பருக்களை மறைய வைக்க சில இயற்கையான எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முகப்பருக்கள் என்பது சத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படுகின்றது. மேலும் உடல் சூடு காரணமாகவும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. மேலும் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் மூலமாகக் கூட ஒரு சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும்.
முகப்பருக்கள் வந்துவிட்டால் அனைவரும் அவதிப்படுவார்கள். முதல்வருக்கு மறைக்க முகத்திற்கு மாஸ்க் அணியும் சில நபர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் முகப்பருக்களை மறைய வைக்க பலவிதமான மருத்துவ முறைகளை எடுப்வர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த முகப்பருக்களை மறைய வைக்க சில எளிமையான டிப்ஸ் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
முகப்பருக்களை மறைய வைக்க சில எளிமையான டிப்ஸ்!!!
* முகப்பருக்களை மறைய வைக்க நாம் டீ ட்ரி ஆயில் பயன்படுத்தலாம். இந்த ஆயில் முகப்பருக்களின் மேல் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் மறையாத தொடங்கும்.
* மஞ்சள் என்பது பலவிதமான நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மஞ்சளை தண்ணீரில் குழைத்து முகப்பருக்கள் மீது தேய்த்து கொள்வதாலும் முகப்பருக்களை மறைய வைக்கலாம். மஞ்சள் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது.
* முகப்பருக்களை மறைய வைக்க நாம் தேனை பயன்படுத்தலாம். தேனை முகத்தில் தடவி விட்டு 15-20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதன் மூலமாக முகப்பருக்கள் மறையாத தொடங்கும்.
* முகப்பருக்களை மறைய வைக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து கன்னத்தில் தடவி 15-20 நிமடங்கள் கழிந்து கழுவி விடலாம். இதன் மூலமாகவும் முகப்பருக்களை மறைய வைக்கலாம்.
இந்த வைத்திய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பருக்கள் மறைந்துவிடும். மேலும் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறும்.