மக்களே தவற விட்டுவிடாதீர்கள்?இன்று முதல் புதிய திட்டம் வினியோகம்?

0
133

கொரானாத் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலை கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என்று கடந்த வாரம் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


மேலும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அரிசியை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களும் விலையுடன் டோக்கன் முறையில் வழங்கப்படும் என்றும்,இதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நான்காம் தேதி வரை அவர் அவர்களின் வீட்டிற்குச் சென்று கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.


இதனையடுத்து சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து நான்காம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று விலையில்லா அரிசியும் இலவச முக கவசமும் மற்றும் விலையுடன் கூடிய மற்ற ரேஷன் பொருட்களை வழங்க உள்ளது.நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக் கவசங்களுடன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முகக் கவசங்கள் சுமார் 1.6 60 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளன.மேலும் நியாயவிலை கடைகளில் முக கவசங்களை விநியோகிக்க கூடுதல் பணியாளர்களை நியமித்து கொள்ளவும் அரசு சார்பில் அறிவுறுத்தியுள்ளது.