நாளை! இந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்! சகல நலன்களும் தரும்!

0
183

நாளை 2. 1.2021 நாளை சங்கடஹர சதுர்த்தி. எந்த ஒரு செயல்களையும் நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழங்குவது வழக்கம். அப்படி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஒரு காரியத்தை செய்தால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம்.

அதேபோல் இந்த வருடத்தின் முதல் நல்ல நாளாக சங்கடஹர சதுர்த்தி உள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகரை இந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று வணங்கினால் சகல சௌபாக்கியமும் வந்து சேரும். நல்ல மேன்மையான வாழ்க்கை பெற விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.

இந்த நாள் அன்று விநாயகரை விரதமிருந்து வழிபட்டால் தேவையான அனைத்தும் வேண்டியதும், வேண்டாததும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம்.

பௌர்ணமிக்குப் பிறகு நான்காவது நாள் வருவது தான் சங்கடகர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானை வழிபடலாம் அருகம்புல் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. வாசனையுள்ள மலர்களை கொண்டு பூஜிக்கலாம். வீட்டில் விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி நெய்வேத்தியம் வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

மாலை வரை விரதம் இருந்து அருகில் உள்ள விநாயகப் பெருமானின் கோயிலுக்குச் சென்ற சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ளலாம். உங்களால் முடிந்தால் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து வழிபடலாம். வீட்டிலேயே பிரசாதம் சமைத்து கோயிலுக்கு எடுத்துச் சென்று வரும் பக்தர்களுக்கு உணவளித்து வணங்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவரின் பேரிலும் அர்ச்சனை செய்யலாம். இப்படி இந்த நாளில் விநாயகரை வணங்கினால் கஷ்டம் தீரும்.

கோயிலில் வழிபட்டு வீட்டிற்குச் செல்லுமுன் சங்கரனை பார்த்துவிட்டுத்தான் வீட்டிற்கு சென்று உபவாசத்தை முடிக்க வேண்டும். நெய்வேத்தியம் உண்டு அல்லது எளிமையான உணவு உண்டு விரதத்தை முடிக்கலாம் அல்லது பால் பழங்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
தடையின்றி அனைத்துக் காரியமும் நடைபெற சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை எப்படி வழிபட்டு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஐஸ்வர்யங்களையும் பெறலாம். நோய்கள் அனைத்தும் தீரும். நிலையான நிம்மதி கிட்டும். கல்வி அறிவு,புத்தி கூர்மை அதிகமாகும்.