இந்தக் கொடியை பார்த்தால் விட்டுவிடாதீர்கள்! சகலவிதமான நோய்களையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்!

0
1115

இந்த கொடியின் பெயர் கட்டுக்கொடி கீரை.

இது அரிதான கீரை. அரைத்த முடித்த சில வினாடிகளிலேயே ரத்தம் உறைவது போல் ஜெல்லி போல் மாறிவிடும். இதற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சகல விதமான நோய்களை கட்டுப்படுத்தி கட்டுகோப்பாக வைத்திருப்பது தான் இதனை கட்டுக்கொடி என்று அழைக்கின்றார்கள். இது எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.

1. இது உடலுக்கு குளிர்ச்சி தந்து உமிழ்நீரைப் பெருக்கும் தன்மைகொண்டது.

2. இந்த இலையை எடுத்து பாக்கு அளவு மென்று தின்று வந்தால் இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

3. கட்டுக்கொடி இலை, வேப்பங்கொழுந்து இரண்டையும் சம அளவில் எடுத்து காலையில் மற்றும் தின்று வர நீரிழிவு நோய், சிறுநீரில் உள்ள சர்க்கரை, களைப்பு, ஆகியவை நீங்கும்.

4. கட்டுக்கொடி இலையை அரைத்து அரை எலுமிச்சைபழ அளவு எருமைத் தயிருடன் கலந்து சாப்பிட்டு வர பெரும்பாடு நீங்கும்.

5. சிறிதளவு கட்டுக்கொடி வேருடன் ஒரு துண்டு சுக்கு மிளகு ஆகியவற்றுடன் காய்ச்சி உண்டு வர வாத வலி, கீல் வாதம் ஆகியவை நீங்கும்.

6. கட்டுக்கொடி இலைச்சாற்றை சர்க்கரை நீரில் கலந்து வைக்க நிமிடத்தில் கட்டியாகும். அந்த கட்டியை காலையில் உண்டு வர வெள்ளை வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை நீங்கும்.

7. கட்டுக்கொடி இலை வேரை, கழற்ச்சி பருப்புடன் இழைத்து விழுதாக்கிக் சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலி குணமாகும்.

8. சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், அதிகப்படியான உதிரப்போக்கு, சீதபேதி, வெள்ளை போக்கு ஆகியவற்றிற்கு கட்டுக்கொடி மற்றும் துத்தி இலை சேர்த்து பயன்படுத்தி வர சரியாகும்.

9. கட்டுக்கொடி இலையை 10 இலைகள் எடுத்த துண்டாக்கி தண்ணீரில் போட்டு நன்கு பிசைந்து விட்டு, சக்கையை வெளியே எடுத்து விட்டு, அரை மணி நேரம் ஊறவைக்க தண்ணீர் ஜெல்லியாக மாறிவிடும். இதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பொடியாக்கி காலையில் மாலையில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப் போக்கு நின்றுவிடும்.

10. விந்து முந்துதல் மற்றும் விந்து நீர்த்தலை சரிசெய்ய உலகம் முழுவதும் இந்த கட்டுக்கொடி பயன்படுத்தப்படுகிறது.

11. சிறுநீரக நோய்களுக்கு கட்டுக் கொடி பயன்படுகிறது.

12. இந்த கட்டு கொடி அதிகமான குளிர்ச்சி தன்மை கொண்டதால் பெண்களுக்கு வரும் வெள்ளை வெட்டை நோய் சரியாகிறது.

13. பால்வினை நோய்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பால்வினை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கட்டுக்கொடி மருந்தாகிறது.

14. உடைந்த எலும்புகளுக்கு வலுவை கொடுத்து சீராக்கும் பணியை கட்டுக்கொடி செய்கிறது.

15. விஷக்கடிக்கு விஷத்தை முறிக்கவும் மற்றும் எரிச்சலை சரிசெய்யவும் கட்டுக் கொடி பயன்படுகிறது.

16. ரத்த அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மையை சரி செய்கிறது.

17. தலைவலி, ஒற்றைத் தலைவலி நாள்பட்ட தலைவலி ஆகியவற்றை சரி செய்கிறது.

அதிகமான மருத்துவ தன்மை கொண்ட இந்த செடியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்!