Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்!

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்!

நாம் தினமும் நிறைய செடி வகைகளை நம் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகளை நாம் பார்ப்பதுடன் சரி. ஆனால் அவைகளின் மருத்துவ பயன்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு செடி வகையும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை நமக்கு அள்ளித் தருகின்றன.நாம் அந்தச் செடியின் பயன்களை அறியாமல் ஏதோ களைச்செடி என்று பிடுங்கி எறிந்து விடுகின்றோம்.

அத்தகைய செடிகளில் பூ முதல் இலை காய்கனி மற்றும் வேர் வரை நிறைய பயன்களை தரக்கூடிய உன்னிச் செடியின் மருத்துவ குணங்களை பற்றி காண்போம்.

இந்தச் செடியின் பூக்கள் அதிக தேன் சுவை கொண்டவை. சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த செடியின் பூ,காய், மற்றும் இலை அனைத்துமே நமக்கு ஏராளமான மருத்துவ குணங்களை அள்ளித் தருகின்றன.

இந்தச்செடி சில இடங்களில் வேலிக்காப்பானாகவும் வீட்டுக்கு முன்புறம் கொசுக்களை தவிர்க்கவும் வளர்க்கப்படுகிறது.

1. உன்னி செடியின் இலைகள் புதினா இலையைப் போல இருக்கும். ஒரு டம்ளர் தண்ணீரில் சில இலைகளை பறித்து போட்டு நன்கு கொதிக்க வைத்து கொடுத்தால் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நுரையீரல் அழற்சி தீரும் மேலும் இதை குடித்து ஒரு மணி நேரத்தில் குடலில் உள்ள கழிவுகள் முழுவதும் வெளியேறும்.

உங்களுக்கு நல்லதொரு குளிர்ச்சியை தரும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையை சமமாக வைத்திருக்கும். மேலும் இவை தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல அருமருந்து. தொழில் ஏற்படும் அரிப்பு, வீக்கம், அலர்ஜி, மற்றும் சொறி சிரங்கு, படர்தாமரை, என அனைத்திற்கும் இந்த இலையை மை போல அரைத்து தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

அம்மை தழும்பு இருக்கும் இடத்தில் இந்த இலையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தடவினால் அம்மை தழும்புகளும் மறைந்து விடும்.

உன்னி செடியின் இலைகள் எந்த அளவு மருத்துவ குணம் அதே போல் அதன் வேரிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் வேர்கள் நமக்கு நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அல்லது செடியில் இருந்து கூட வேரினை எடுத்து நன்றாக அலசி துண்டுகளாகி காய வைத்து பொடி செய்து கொள்ளலாம்.

இந்த பொடியை பல் துலக்குவதற்கு உபயோகப்படுத்தும் பொழுது பல் சொத்தை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.மேலும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும். வாய் துர்நாற்றத்தை சரி செய்து பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

இரண்டு அல்லது மூன்று துண்டு உன்னி வேரினை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர கண் புரை நோய் படிப்படியாக குறையும். கண் பார்வையை தெளிவாக்கும்.

உன்னி செடியின் இலைகள் மூட்டு வலி மற்றும் வாத நீரினால் ஏற்படும் வலி,வீக்கம், இவற்றை சரி செய்யும். உன்னி செடியின் இலைகளை பறித்து அரைத்து மூட்டுகளில் பத்து போல போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விட இரண்டு நாட்களில் வாத நீர் சரியாகிவிடும். மூட்டு வலி,கை கால் வலி, குடைச்சல், அனைத்தும் சரியாகும்.

உன்னி செடியின் பூவில் அதிகளவு இனிப்பு சுவை உள்ளது. இந்த பூக்களை பறித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளியை முற்றிலுமாக கரைத்து விடும். இருமல் தொந்தரவும் இருக்காது.

மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற நோய்களை குணமாக்கும். கர்ப்பப்பையை வலுவாக்கும். உன்னி செடியின் பூக்கள் அதிகமாக கிடைக்கும் பொழுது அவற்றை பறித்து நிழலில் உலர்த்தி காற்று போகாத டப்பாவில் போட்டு டீ வைத்து குடிக்கலாம். இந்த டீயை குடிக்கும் பொழுது நுரையீரல் காச நோயை குணப்படுத்தும்.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Exit mobile version