Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

30.8.2020 சக்தி வாய்ந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்!

ஞாயிறு பிரதோஷம்

சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு தவறாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

ஞாயிறு அன்று வருவது ஆதிப்பிரதோஷம். நவ கிரகங்களினால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
பொதுவாக 4.30 -6 மணி வரை பிரதோஷ நேரம் என்று சொல்வார்கள்.
பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் அனைத்து தேவர்களின் ஆசிகளும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
நமக்கு வருகின்ற துன்பங்கள், நோய்கள் எல்லாவற்றையும் போக்கும் சக்தி உடையவர் சிவபெருமான்.

இந்த நாளில் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலை போட்டு, நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து நந்தியை மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பிரதோஷ வேளையில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை கடைபிடியுங்கள்.

Exit mobile version