சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட தவறாதீர்கள்! அதனால் ஏற்படும் நன்மைகள்!
முழு முதற்கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
மேலும் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை கணபதிஎன்று அழைக்கின்றோம். எனவே நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும். எனவேதான் மூல கணபதி என்றும் கூறுகின்றோம்.
கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை யாவும் நெருங்காது.
அப்படி அனைவராலும் போற்றப்படும் விக்ன விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி, ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு.சித்திரை – விஷ்ணு லோகம்,
வைகாசி – சங்கர் ஷணலோகம்,ஆனி – சொர்க்க லோகம்,ஆடி – நினைத்த செயல் கைகூடும்,ஆவணி – எல்லா விருப்பமும் நிறைவேறும்,புரட்டாசி – சுகம் பெறலாம்,
ஐப்பசி – சிவ பூஜை செய்த பலன் கிட்டும்,கார்த்திகை – பெண்களுக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும்,மார்கழி – மகிழ்ச்சி வந்து சேரும்,தை – தனலாபம் கிடைக்கும்,மாசி – ஆரோக்கியம் பெறலாம்,பங்குனி – அனைத்து செல்வங்களும் கிடைக்கும், இவை அனைத்தும் உங்களுக்கு கிடைக இவ்வாறு நீங்களும் வழிபடுங்கள்.