இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!!

0
71
#image_title

இனி பாதம் பவுடரை காசு கொடுத்து வாங்காதீர்கள்!! வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம்!! அட இவ்வளவு நாளா இது தெரியமா போச்சே!!

நம் அனைவருக்கும் பிடித்த பானத்தில் ஒன்று பாதம் பால்.இவை ஆரோக்கியமும்,சுவையும் நிறைந்த ஒன்று.பாதாம் பருப்பில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கடைகளில் கிடைக்கும் பாதாம் பவுடரில் கலப்படம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே வீட்டு முறையில் இந்த பாதாம் பவுடரை தயார் செய்து குடித்தால் சுவையாகவும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பாதாம் பருப்பு – 1/2 கப்

*பால் பவுடர் – 1/2 கப்

*சர்க்கரை – 1/2 கப்

*ஏலக்காய் – 6

*குங்குமப்பூ – 1 சிட்டிகை அளவு

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

1) அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அதன் பின் அடுப்பை அணைக்கவும்.

2) அதில் 1/2 கப் பாதம் பருப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

3) அதன் பின் பாதம் பருப்பை தோலுரித்து வைக்கவும்.

4) அடுப்பில் கடாய் வைத்து அதில் தோலுரித்து வைத்துள்ள பாதம் பருப்பை மிதமான தீயில் மிருதுவாக வரும் வரை வறுக்கவும்.அதன் பின் பாதம் வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

5) பாதம் பருப்பை ஆற விட்டு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

6) அதன் பின் அதில் அரை கப் சர்க்கரை,குங்குமப் பூ மற்றும் பால் பவுடர் சேர்த்து அரைக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

7) பின்னர் அதே மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

8) பின்னர் அதை அரைத்து தட்டில் கொட்டி வைத்துள்ள பாதாமில் சேர்க்கவும்.அதோடு மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து கலக்கி ஒரு சுத்தமான காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.

பாதம் பால் செய்யும் முறை:-

*அடுப்பில் டீ பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் பால் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

*பிறகு ஒரு டம்ளரில் அரை தேக்கரண்டி சர்க்கரை மற்றும் செய்து வைத்துள்ள பாதம் பவுடர் 1 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.[பாதம் பவுடரை இந்த முறையில் செய்து பாலில் கலந்து குடித்தோம் என்றால் கடையில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும்.