இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா.. வசமாக சிக்கிய திமுக!! அண்ணாமலையிடம் மாட்டிய அமைச்சர் வீடியோ!!
ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா இறப்பிற்கு பிறகு இடைத்தேர்தல் ஆனது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் இதற்கான பணிகளை செய்து வருகின்றது.
ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் செல்கிறதோ அதற்கு தான் ஆதரவளிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வருவதையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் பல விமர்சனங்கள் செய்து வரும் நிலையில் தற்போது திமுக கேஎன் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் காசு வழங்குவது குறித்து என ஆரம்பித்து பல முக்கிய விஷயங்களை பேசி இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த வீடியோவை தற்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதாவது, கே என் நேரு அவர்கள் இளங்கோவனிடம், நான் நேற்றே சொல்லிவிட்டேன் எல்லாரும் வந்துடுங்கன்னு மந்திரி எல்லாம் தேவையில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டேன். நான் எதையும் கண்டுக்க மாட்டேன் நீங்கள் அங்க பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேபோல எல்லா மாவட்ட தலைவர்களையும் அழையுங்கள் அனைவருக்கும் காசு கொடுக்க வேண்டும் என கே என் நேரு கூறியது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.அவ்வாறு எல்லாரையும் கூப்பிட்டு பிளாட்டினம் மாலில் பணம் கொடுத்து செட்டில் பண்ணிடனும்.இந்த வேலை அனைத்தையும் தேர்தலுக்கு முன்பு அதாவது பிப்ரவரி ஒன்றாம் தேதி குள்ளேயே முடித்து விடனும் என்ற தெளிவாக கூறியது பதிவாகியுள்ளது.
அது மட்டுமின்றி தற்போது உள்ள 31 பூத்திலும் பத்தாயிரம் பேரை ரெடி பண்ணியே ஆகணும். மேலும் நான் நாளை சென்னை போக உள்ளேன். முதல்வர் அவர்கள் அதிகாரிகளை பாராட்டி பரிசாக வாட்ச் வழங்க உள்ளார். அதனால் நான் தற்பொழுது திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்ல இருக்கிறேன்.
அங்கு நடக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்தையும் முடித்துவிட்டு வரும் 31-ஆம் தேதி மீண்டும் இங்கு வந்து விடுவேன். அதுமட்டுமின்றி நாசர் ஐந்துக்கு மேல வேண்டாம் என கூறுகிறான். அதேபோல அங்கு இருக்கும் லோக்கல் ஆளுங்க, அண்ணனுங்க எல்லாம் விடுதலை சிறுத்தைகள் என்று சொல்லிட்டு இருக்காங்க, அவர்கள் கொடுத்துட்டாங்களான்னு பார்த்துக்கோங்க என்றவாறு பேசிய வீடியோ தெல்லாம் தெளிவாக பதிவாகியுள்ளது.