ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

0
119
Don't sacrifice this on July 10th! Animal Minister's announcement!

ஜூலை 10ம் தேதி இதை பலியிடாதீர்கள்! கால்நடை அமைச்சர் வெளிட்ட அறிவிப்பு!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை ஈத் அல்-அதா. பக்ரீத் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் பண்டிகை ஆகும்.

பக்ரீத் பண்டையின் போது பலியிடும் பாரம்பரியம் உள்ளது. அதற்கு பசு, எருது, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் பயன்படுத்துகின்றன. மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் எக்காரணம் கொண்டும் மாடுகளை வதைக்க கூடாது என்று கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு பி சவான் அறிவுத்திருந்தார்.

இது குறித்து அவர் மாநிலத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்து பசுவதை தடை சட்டம் மீறினால் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் குற்றவாளிகளின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அறிவித்துள்ளார்.

பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2020 மாடுகளை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது பசுவை கொன்றவதற்காக வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர் இருக்குமாறு அமைச்சர் பிரபு சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசு,மாடு, காளை, கன்று, ஒட்டகம் மற்றும் 13 வயது எருமை உள்ளிட்ட கால்நடைகளை அறுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஜூலை 10 அன்று அனுசரிக்கப்பட உள்ளது. தியாகவிருந்து என்று அழைக்கப்படும் பக்ரீத் தினத்தில் அல்லாஹ்வின் மீதான பக்தி மற்றும் அன்பை நிரூபிக்க ஒரு விலங்கு பொதுவாக ஒரு செம்மறி அல்லது ஆடு ஆகியவற்றை பலி கொடுக்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகையில் ஒரு பங்கு ஏழை எளியோருக்கும், இரண்டாம் பங்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், கடைசி பங்கு தங்கள் குடும்பத்தினருக்கும் செல்கிறது.