Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவரை காப்பாற்ற வேண்டாம்! மனைவி கூறிய பதில்! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

இன்றோ நாளையோ என்று மரணப்படுக்கையில் இருக்கும் கணவரை காப்பாற்ற வேண்டாம் என்று மனைவி கூறியதை கேட்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுவாக ஒரு நபர் மரணப்படுக்கையில் இருக்கிறார் என்றாலோ அல்லது உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். என்றாலோ அனைவரும் கூறுவது எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்றுதான். ஆனால் சீனாவில் மனைவியே கணவரை காப்பாற்ற வேண்டாம் என்று கூறியுள்ளது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
சீனாவில் லையானிங் மாகாணத்தில் வசித்து வந்த 38 வயதான நபர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட அந்த நபரின் நிலைமை மோசமடைந்தது.
இதையடுத்து அந்த நபரின் மனைவிக்கு அவருடைய நிலையை பற்றி கூற வேண்டும் என்று முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நபரின் மனைவியை மருத்துவர்களால்  கண்டுபிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் மருத்துவமனைக்கு ஒரு பெண் வந்து நான் தான் அந்த நபரின் மனைவி என்றும் அந்த நபரை காப்பாற்ற வேண்டாம் என்றும் கூறியது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த நபரின் மனைவியிடம் டாக்டர்கள் “கணவரின் நிலைமை மிக மிக மோசமாக இருக்கின்றது. அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்றுவது மிகவும் சிரமம். நாங்கள் தற்பொழுது கொடுக்கும் சிகிச்சை உங்கள் கணவரை தற்காலிகமாக பாதுகாக்கும். அறுவை சிகிச்சை செய்தால் அதற்கு மேலும் பணம் செலவாகும்” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த பெண் “என்னுடைய கணவர் எனக்கு உண்மையாக இல்லை. 10 வருடங்களாக அவருக்கு என்மேல் அன்பும் இல்லை. அவர் எங்களுக்கு பண உதவி எதுவும் செய்யவில்லை. காலங்கள் செல்ல செல்ல எனக்கும் அவர் மீது இருந்த அன்பு குறைந்து தற்பொழுது சுத்தமாக அன்பு இல்லாமல் போனது.
அவரை காப்பாற்ற வேண்டாம். அவருக்கு அளித்து வரும் சிகிச்சைகளை நிறுத்துங்கள். அவருக்கு மூச்சுக்குழாய் வழியாக கொடுக்கும் சிகிச்சைகளை நிறுத்துங்கள். அவரை காப்பாற்ற இருக்கும் அனைத்து விதமான முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மேலும் முதல் மனைவி அவர்கள் ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்து எல்லாம் இட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். கணவனை காப்பாற்ற முன் வராத அந்த பெண்ணை புகழ்ந்தும் திட்டியும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Exit mobile version