குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

0
142
Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கடந்த 23 ஆம் தேதி தெரிவிக்கையில் உலகளவில் கவனம் கொள்ள வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது.

எனவே இதுவரை 75 நாடுகளில் இந்த நோய் பரவிவுள்ளது.சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள் என மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இதை பற்றி கூறுகையில் மிக சிறந்து விளங்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதுவரை உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் கூடுதலான குரங்கம்மை பாதிப்புகள் பற்றி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 78 நாடுகள் அடங்கும்.இந்த பாதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும் மற்றும் 25 சதவீதம் அமெரிக்காவிலும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கொரோனாவை பற்றி கடந்த காலங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.அது இணையதளத்தில் விரைவாக பரவிடுகிறது.

அதுபோன்று குரங்கம்மை பாதிப்புகள் பற்றிய தவறான புரலைகளை பரவாமல் தவிர்க்க வேண்டும். அதனால் சமூக ஊடக தளங்கள் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி அமைப்புகள் எங்களுடன் பணியாற்றி தீங்கு விளைவிக்கும் தகவல்கள் பரவி விடாமல் தடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தனர்.