Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜீரணம் ஆகாமல் அவதியா.. உடனே இதனை செய்யுங்கள்!! இனி சோடா தேவையில்லை!!

Don't suffer from indigestion.. Do this immediately!! No more soda!!

Don't suffer from indigestion.. Do this immediately!! No more soda!!

ஜீரணம் ஆகாமல் அவதியா.. உடனே இதனை செய்யுங்கள்!! இனி சோடா தேவையில்லை!!
நாம் நினைத்த நேரத்தில் உணவு உண்கிறோம். வளர்ந்து வரும் இந்த காலத்தில் பல வகையான உணவுகளை நமக்கு தோன்றும் பொழுது உடனே வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். அந்த உணவுகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது என்பது குறித்து நாம் எதிர்பார்ப்பது இல்லை.
உணவு பார்ப்பதற்கும் சுவைக்கவும்  நன்றாக இருக்கின்றது என்றால் நாம் உடனே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இதனால் நம்முடைய உடலுக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. குறிப்பாக அஜீரணக் கோளாறு ஏற்படுகின்றது. அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று எரிச்சல் போன்ற இன்னும் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த அஜீரணம் பிரச்சனையை எளிமையாக சரி செய்யக் கூடிய மருத்துவ முறைகள் பற்றி பார்க்கலாம்.
அஜீரணப் பிரச்சனையை சரி செய்யும் எளிமையான சிகிச்சை முறைகள்…
* அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அதில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி இவை மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் நன்றாக கொதித்த பின்னர் இதை வடிகட்டி குடித்தால் அஜீரணம் பிரச்சனை குணமாகும்.
* ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த வெற்றிலையில் 4 மிளகு வைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
* அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அதில் சீரகம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை ஆற வைக்க வேண்டும். இது ஆறிய பின்னர் சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரை குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
* இஞ்சியை நன்றாக தட்டி அதிலிருந்து இஞ்சி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு இஞ்சி சாற்றை எடுத்து ஒரு சிறிய டம்ளரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு குடித்தால் அஜீரணம் சரியாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
Exit mobile version