Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவங்களுக்கு இ பாஸ் கிடையாதா? மதுபாட்டிலுடன் சிக்கிய பிரபல நடிகை!

பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மதுபான பாட்டிலுடன் மாட்டி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ள நிலையில், வெளி மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு, நாடுகளுக்கு செல்ல முடியாது மீறி தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய காரணத்துடன் இ பாஸ் பெற்று செல்லுமாறு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி , மாவட்ட எல்லைப் பகுதிகள் அனைத்திலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து கடுமையான முறையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இ பாஸ் இல்லாமல் யாரும் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவும் முடியாது, உள்ளே நுழையவும் முடியாது. தற்போது பாண்டிச்சேரியில், இருந்து பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது காரில் மது பாட்டில்களுடன் சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நடிகை என்று அறிந்த பின்பும், வாகனத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேற்கொண்ட சோதனையில், அவரது காரில் மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வேறு மாநிலத்திலிருந்து மதுபாட்டில்கள் அளவுக்கு அதிகமாக வாங்கி வந்தாலும் அவை மது கடத்தலாக கருதப்படும் என்று கூறி அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, இவர்களுக்கு மட்டும் எப்படி ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்கு செல்ல இ பாஸ் கிடைக்கிறது. மற்றவர்கள் எல்லாருக்கும் இ பாஸ் கிடைக்க எவ்வளவு கடினமாக இருக்கிறது. இவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமாக நீ பாஸ் கிடைத்தது என்று விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக நடைபெற்று வருகிறது.

Exit mobile version