Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர்.
பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிறு உப்புசம், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணியாக கருதப்படுகிறது. பூஞ்சைக் காளானால் வரும் நோய்களையும் குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது.

 

Exit mobile version