கெமிக்கல் சோப் வேண்டாம்.. சருமத்தை மிருதுவாக்க நலுங்கு மாவு பயன்படுத்துங்கள்!!

0
75

தங்கள் சரும அழகை மேம்படுத்த,வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த தினமும் நலுங்கு மாவு பூசி குளிங்க.

நலுங்கு மாவு செய்ய தேவைப்படும் பொருட்கள்:-

1)கடலை பருப்பு – 20 கிராம்
2)வெட்டி வேர் – 20 கிராம்
3)காய்ந்த ரோஜா இதழ் – கால் கப்
4)காய்ந்த ஆரஞ்சு பழத் தோல் – கால் கப்
5)காய்ந்த துளசி – கால் கப்
6)காய்ந்த வேப்பிலை – நான்கு கொத்து
7)சந்தனத் தூள் – இரண்டு தேக்கரண்டி
8)நெல்லிக்காய் வற்றல் – கால் கப்
9)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு – ஒன்று
10)ஓமம் – இரண்டு தேக்கரண்டி

நலுங்கு மாவு செய்முறை விளக்கம்:-

**முதலில் வாணலியில் கடலை பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு தேக்கரண்டி ஓமத்தை அதில் போட்டு வாசம் வரும் வறுக்க வேண்டும்.பின்னர் ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அதில் போட்டு வறுக்க வேண்டும்.

**பின்னர் துளசி.வேப்பிலை,ரோஜா இதழ்,நெல்லிக்காய் வற்றல்,ஆரஞ்சு தோல்,வெட்டி வேர் போன்றவற்றை உலர்த்திய நிலையில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு வத்தல் பதத்திற்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

**அதேபோல் ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

**வறுத்த மற்றும் காய வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஜல்லடை கொண்டு சலித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த நலுங்கு மாவு பொடி தேவையான அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.

**இதை உடலில் பூசி நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இந்த நலுங்கு பொடியை பயன்படுத்துவதால் உடல் துர்நாற்றம் கட்டுப்படும்.உடலில் அழுக்கு மற்றும் வியர்வை சேர்வது கட்டுப்படும்.

**இரசாயன சோப்பிற்கு பதில் இந்த நலுங்கு மாவு பொடியை பயன்படுத்தி குளித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.தாங்கள் விருப்பப்பட்டால் இந்த ஏலக்காய்,பச்சை கற்பூரம்,பாசி பயறு உள்ளிட்ட பொருட்களை சேர்த்து நலுங்கு மாவு அரைத்து பயன்படுத்தலாம்.