நம் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் வெளிக்காட்டுவது உதடுகள் தான்.ஆனால் எல்லோருக்கும் அழகான லிப் இருப்பதில்லை.லிப்பில் கருமை இருக்கும் பட்சத்தில் அவை அழகை கெடுத்துவிடும்.இந்த கருமை உருவாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.உதடு கருமை சீக்கிரம் நீங்க சில எளிய டிப்ஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)வெள்ளரிக்காய்
2)தேன்
செய்முறை:
ஒரு துண்டு வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து உதடு முழுவதும் அப்ளை செய்தால் உதட்டு கருமை நீங்கி சிவப்பழகு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)பீட்ரூட்
2)தேன்
செய்முறை:
ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு வாணலியில் வடிகட்டி அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்கவிடவும்.
பீட்ரூட் சாறு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து ப்ரிட்ஜில் வைத்து இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு குளிரவிடவும்.பிறகு இதை உதடுகளுக்கு அப்ளை செய்து வந்தால் உதட்டில் காணப்படும் கருமை நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)சர்க்கரை
2)எலுமிச்சை
செய்முறை:
ஒரு எலுமிச்சையை இரண்டாக நறுக்கி பாதி பழத்தின் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு எலுமிச்சை தோலில் இந்த சர்க்கரை கரைசலை சேர்த்து உதடுகளில் வைத்து மிருதுவாக மசாஜ் செய்து வந்தால் உதடு கருமை நீங்கிவிடும்.