SELF CERTIFICATION: இனி வரும் காலங்களில் புதியதாக கட்டுமானப் பணிக்கு கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு இ- சேவை மையத்தை அணுகுவதன் மூலம் சுய சான்றிதழ் பெற முடியும்.
தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது புதியதொரு மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டுள்ளது. புதியதாக கட்டுமானப் பணிகளை தொடங்க இருப்பவர்கள் அதற்கான கட்டிட அனுமதியினைப் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி இருந்தனர்.
மனை மற்றும் கட்டிடங்கள் மேம்பாட்டுத்துறை மூலமாகவோ அல்லது கட்டுமானத் துறையில் அனுபவம் மிக்கவர்கள் மூலமாகவோ மக்கள் கட்டிடம் கட்டுவதற்கான முன் அனுமதி சான்றிதழைப் பெற்று வந்தனர். இது போன்ற சான்றிதழை பிற நபர்களின் வாயிலாக விண்ணப்பிக்க பலதரப்பட்ட மக்களால் லஞ்சப் பணம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் பொருட்டு தமிழக அரசானது ஒரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் இனி சுய சான்றிதழ் முறை அடிப்படையில் கட்டிட முன் அனுமதி பெற முடியும். அதற்காக விண்ணப்பிக்க வேறு எங்கும் அல்லாடத் தேவையில்லை. அருகிலுள்ள இ- சேவை மையத்தினை அணுகினாலே போதும். https://onlineppa.tn.gov.in/