Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும்ல? கணவரை பிரிந்து கதறும் மனைவி! பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அட்டகாசம்!

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் தொடர்பாக அவருடைய இளம் மனைவி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கவலை தெரிவித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்1ல் சுமார் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் பங்கேற்று கொண்டு பொது மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய காதலியான கன்னிகாவை கமல்ஹாசன் தலைமையில் திருமணம் செய்தார்.

இந்த சூழ்நிலையில், சினேகன் திருமணம் முடிவடைந்து 6 மாதங்களே ஆன சூழ்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கின்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சினேகன் சென்றிருக்கிறார்.

இதனை கருத்தில் வைத்து அவருடைய இளம் மனைவியான கன்னிகா உன் பிரிவை தாங்க என் நெஞ்சில் தெம்பு இல்லை என்று தன்னுடைய வலைப்பதிவில் கவலை தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version