இது தெரியாம நீங்கள் வேலை செய்யாதீர்கள்!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

0
113

இது தெரியாம நீங்கள் வேலை செய்யாதீர்கள்!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் எட்டு மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற உரிமை தொழிலாளர்களுக்கு எளிதாக கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். பல நாடுகளில் பல ஆண்டுகள் நடந்த போராட்டத்தின் விளைவாக இந்த உரிமை கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு தினமும் எட்டு மணி நேரம் வேலை என்பது ஒரு நேரத்தில் உலகம் முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் அந்தந்த நாடுகளில் சூழல் அங்கிருந்து அழுத்தங்கள் தொழிற்சூழல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவைகள் அமலுக்கு வந்தன.

உலகின் முதல் முதலில் எட்டு மணி நேரம் வேலையே அறிமுகப்படுத்திய தேசம் ஸ்பெயின் இரண்டாவது பிலிப்பைன்ஸ். தொழிலாளர்கள் காலை நான்கு மணி நேரம் மாலை 4 மணி நேரம் பணியாற்றுபவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. பல பகுதிகளும் 24 மணி நேரம் வேலை என்பது சர்வ சாதாரணமாக இருந்தது பிரிட்டனின் தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு வேலை நேரம் மீதம் நான் அழுத்தம் இன்னும் அதிகரித்தது. அந்த தருணத்தில் ஜவுளி தொழிலா தொழிற்சாலைகளில் முதலாளியும் தொழிலாளர்கள் நலம் குறித்து பேச ஆரம்பித்தனர். தொழிற்சாலைகளின் சூழலை மேம்படுத்த குழந்தைகள் வளர்ப்பை கூட்டாக செய்வது போன்றவைகள் அவர் தொடர்ந்து குரல் கொடுத்த வந்தார்.

தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தும் விகாரம் தொடர்ந்து விவாதமாக இருந்த நிலையில் 10 மணி நேரம் வேலை அமலுக்கு வந்தது. இதற்கிடையே சர்வதேச தொழிலாளர்கள் பாராளுமன்றம் கூடி இதனைப் பற்றி பேச தொடங்கினர். இந்தக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் 8 மணி நேரம் வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.இதனை ஒட்டியே மே ஒன்றாம் தேதி உலகம் எங்கும் படிப்படியாக பிரபலமாக ஆரம்பித்தது.

ஒரு அரச சாஸத்தின் மூலம் எட்டு மணி நேர வேலை என்ற கருத்தகம் இருந்ததால் 1919 ஆம் ஆண்டு இதற்கு என்ன சட்டத்தை இறக்கியது ஸ்பெயின் எந்த வேலை பார்ப்பவர்கள் இருந்தாலும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்பது நாடு முழுவதும் அவனுக்கு வந்தது.

ஆசியாவில் முதன் முதலில் இந்திய நாட்டில் புதுச்சேரி மாநிலத்தில் 8 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டது. 1911 ஆம் ஆண்டு சுப்பையா என்பவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். பல தொழிற்சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொத்தடிமையாகவும் அதிக நேரம் வேலை செய்பவர்களை  பல செயல்களை செய்து வந்துள்ளார்கள். இதனை எதிர்த்து சுப்பையா தனது பத்திரிக்கையில் எழுதி வந்துள்ளார். 1936 ஆம் ஆண்டு 200 தொழிற்சாலைகளில் சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். 1937 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தினர். அதில் எட்டு மணி நேரம் வேலை செய்து கொள்ளலாம் மற்றும் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை அமல்படுத்தியது. அடுத்து இந்தியா முழுவதும் எட்டு மணி நேர வேலை சட்டம் 1945 நவம்பர் எட்டாம் தேதி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் இந்தியா முழுவதற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதன் பிறகு தான் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்றது. இந்த தகவலை அனைத்து தொழிலாளர்களும் தெரிந்து கொண்டு வேலை செய்யுங்கள்.