Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!!

Don't worry if you break up.. New insurance policy plan has arrived!!

Don't worry if you break up.. New insurance policy plan has arrived!!

பிரேக் அப் செய்தால் இனி கவலையில்லை.. வந்துவிட்டது நியூ இன்சுரன்ஸ் பாலிஸி திட்டம்!!

முன்பு காதலர்கள் காதலித்தது போல தற்பொழுது யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பல அசம்பாவிதங்கள் தினம் தோறும் வந்த வண்ணமாகவே இருந்தாலும் தற்பொழுது காதல் தோல்வியால் இனி கவலைப்பட தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையிலும் வாலிபர் ஒருவரின் இன்சூரன்ஸ் திட்டம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது காதல் தோல்வி அடைந்தவர்கள் ஏன் வருத்தப்பட வேண்டும் என்ற அளவிற்கு இவர் சிந்தித்து தாமாகவே முன்வந்து இவ்வாறான திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த பிரேக்கப் இன்சூரன்ஸ் திட்டத்தில் காதலர்கள் இருவரும் சேர்ந்து  ஜாயிண்ட் அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.பின்பு அதில் இருவரும் மாதந்தோறும் 500 என்ற வகையில் பணம் செலுத்தி வரவேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில் யார் முதலில் ஒருவரை விட்டு செல்கிறாரோ அதவாது காதலித்து யார் ஏமாற்றம் அடைகிறாரோ மற்றொருவருக்கு அந்த இன்சூரன்ஸ் பணம் முழுமையாக கிடைக்கும் என்பதே இந்த பிரேக் அப் இன்சூரன்ஸ் திட்டம்.

அந்த வகையில் தற்பொழுது  வாலிபர் பிரதீப் ஆரியன் தனது காதலியுடன் தொடங்கிய இந்த திட்டத்தில் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது எனவும் இது எனக்கு நன்றாக பயனளித்துள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல இந்த இன்சுரன்ஸ் திட்டத்தில் யார் உண்மையுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களுக்கு தான் இந்த இன்சுரன்ஸ் பணம் கிடைத்து முழுமையாக பயன்பெற முடியும் என்று கூறினார்.இதனை அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version