குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
பொங்கல் திருநாள் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அந்த பொருட்கள் தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பும் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. அந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்று கொண்டது பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க உத்தரவிட்டது.இந்த உத்தரவின் பேரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க டோக்கன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
டோக்கன் வரும் எட்டாம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைக்கின்றார். அனைத்து மாவட்டங்களிலும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.