Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

#image_title

வெள்ளை முடி வந்து விட்டதா கவலை வேண்டாம்!! இந்த எண்ணெயை தடவினால் போதும்!!

நம் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க ஒரு ஈஸியான வழிமுறையை இங்கு பார்ப்போம். நம் முடியை கருப்பாக்க செயற்கையான முறையில் நிறைய செய்கிறோம் அதனால் முடி கொட்டுதல், முடி வறண்டு காணப்படுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே இயற்கையான முறையில் நரைமுடி கருப்பாக ஒரு வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த ரெமிடிக்காக நான்கு பாதாம் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதாம் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது. பாதாமில் நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது.

இந்த பாதம் முடியை கருப்பாக்குவதோடு மட்டுமல்லாமல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரச் செய்கிறது. இந்த பாதாமுடன் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து நமக்கு தேவைப்படும் பொருள் வெங்காயத்தோள். நமது வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதில் இந்த வெங்காயத்தோள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

செய்முறை:

அடுப்பை பற்ற வைத்து வானலியில் நான்கு பாதாமை போட்டுக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளவும். இது இரண்டையும் சிறிது நேரம் வறுத்து விட்டு பிறகு இதனுடன் வெங்காயத்தோளை சேர்க்க வேண்டும்.

இது மூன்றையும் சிறிது நேரம் நன்றாக வறுத்து விட்டு பிறகு அதன் சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடரில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து விட்டு பிறகு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து இரண்டு நாட்களுக்கு அப்படியே விடவும்.

இரண்டு நாட்கள் கழித்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணையை மூன்று நாட்களுக்கு தடவி அடுத்த நாள் தலைக்கு குளித்து வரவும். இவ்வாறு இதை ஒரு மாதத்திற்கு செய்ய வெள்ளை முடி முழுவதுமாக கருப்பாக மாறிவிடும். இந்த ரெமிடியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது.

Exit mobile version