ஆரோக்கியமாக இருக்க உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்று.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற அவசியம் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நீங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அது நிச்சயம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் மேம்படும்.தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் குறைவதோடு தேவையற்ற கழிவுகள் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேறும்.
நம் உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.இது நிபுணர்களின் பரிந்துரை.ஒருவேளை நீங்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நிச்சயம் உங்களுக்கு நீரிழப்பு ஏற்படும்.அதாவது உடலில் நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பலவித பாதிப்புகள் உருவாகும்.தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.சிறுநீர் பாதையில் கிருமி தொற்று அதிகளவு உருவாகி பாதிப்பை உண்டாக்கும்.
அதேபோல் நீர்ச்சத்து குறைபாட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம்.நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சரும வறட்சி ஏற்படும்.உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது அதிகப்படியான சோர்வை அனுபவிக்க நேரிடும்.
செரிமானப்பிரச்சனை,ஒற்றைத் தலைவலி,மலச்சிக்கல்,துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியேறுதல்,வாய் துர்நாற்றம் ,உடல் துர்நாற்றம்,தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.எனவே உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.