இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!

0
114
Door-to-door distribution of Pongal package token has started from today!!

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் உள்ளது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் ரூபாய் 249.76 கோடி செலவில் இந்த தொகுப்பு வரையறை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு உடன் இலவச வேட்டி சேலையிலும் இந்த தொகுப்பில் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுக்கு விநியோகத்திற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கு சென்று வீடு வீடாக பணியை தொடங்கியுள்ளது.

அந்த டோக்கனில் எந்த தேதியில் எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு வந்து வாங்கிக் கொள்ளுமாறு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன் முறையை அறிமுகம் செய்வதற்கான முக்கிய காரணம் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து வாங்கி செல்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.