மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!

0
67

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக தடுக்கப்படும் என்றும் பயனர்களுக்கு வரக்கூடிய அழைப்பு யாரால் மேற்கொள்ளப்படுகிறது என்று விவரங்களும் தெளிவாக அதில் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ET Telecom வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

கடந்த வாரம் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு நடத்தப்பட்ட சந்திப்பேன் பொழுது தொலைத் தொடர்பு துறையில் போல இந்த CNAP சோதனையில் இருப்பதாகவும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த CNAP ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் 2G அலைக்கற்றை செல்போன்களை பயன்படுத்தக் கூடிய பயனர்களுக்கு இது பயன்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்பொழுது பெரும்பாலும் புழக்கத்தில் இருக்கக்கூடிய Truecaller மற்றும் Bharat Caller ID & Anti Spam போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் நம்பகத்தன்மை உடையதாக இல்லாமலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை சார்ந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் CPNI என்கின்ற calling party name identification சேவையை வழங்குவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.