இரட்டை இலை தான் அதிமுகவின் பிரம்மாஸ்திரம்.. அரசியலுக்கு ஏன் வரவில்லை சூசகமாக தெரிவித்த ரஜினி!!

0
117
double-leaf-is-the-brahmastra-of-aiadmk-rajini-hinted-why-he-did-not-enter-politics

மறைந்த “நடிகை ஜானகி அவர்களின் நூற்றாண்டு விழா” சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை “நடிகர் ரஜினிகாந்த்” அவர்களுக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், “காணொளி” மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அதில் இந்நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தினுடைய முதல் பெண் முதல்வரை பற்றி பேசும் வாய்ப்பை பெற்றேன் என்றார். திரு.மதி ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் எம்ஜிஆருக்காக தனது திரைத்துறை வாழ்க்கையை துறந்தவர்.

எம்ஜிஆர் ஜானகி அவர்களின் வீட்டுக்கு சென்றால் எப்போதும் உணவு கிடைக்கும். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஜானகி அவர்களுக்கு எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு பின்னர் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானது. எம்ஜிஆர் அவர்கள் விட்டுச் சென்ற ஆட்சி பணியையும், அவரின் தொண்டர்களையும், காக்க வேண்டும் என்னும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது கட்சி பிளவுபட்டது. இரட்டை இலை முடக்கப்பட்டதை விரும்பாத ஜானகி அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் பொறுப்பை கொடுத்தார். ஜெயலலிதா அவர்களிடம் நீங்கள் தான் அரசியலுக்கு சரியான நபர் என்று கட்சியை அவர்களிடம் ஒப்படைத்தார்.

இரட்டை இலை தான் அதிமுகவின் பிரம்மாஸ்திரம். ஜானகி அவர்கள் இரட்டை இலை பெறுவதற்காக பெரும் தியாகம் செய்துள்ளார். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது. நிறைய நபர்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அவர்கள் எனக்கு கொடுக்கும் ஆலோசனை கேட்டபோது. அவர்கள் தெரிந்து தான் சொல்கிறார்களா தெரியாமல் சொல்கிறார்களா, என்றே புரியாது. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டால், அவ்வளவுதான். வாழ்க்கையில் நிம்மதி உட்பட அனைத்தும் இழந்து விடுவோம்.

ஒருவர் ஒரு முடிவு எடுக்கும்போது அந்த முடிவு உனக்கு மட்டும் சந்தோஷம் தருமா. அதனால் மற்றவர்களுக்கும் சந்தோசம் கிடைக்குமா என்று சிந்தித்துப் பார். அது உனக்கு மட்டும் சந்தோஷம் கொடுக்கும் என்றால். அந்த முடிவு எடுக்க வேண்டாம், மற்றவர்களும் சந்தோஷம் அடைவார்கள் என்றால். அந்த முடிவை எடு என்று, “ராமகிருஷ்ண பரமஹம்சர்” சொல்கிறார்கள்.

அதே போல தான் ஜானகி அவர்கள் யாரிடமும் கேட்காமல், தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அவர்களிடம் இரட்டை இலையை ஒப்படைத்து விட்டு தனது அரசியல் வாழ்க்கையை துறந்தார். இந்த செயல் பாராட்டிற்குரியது. ஜானகி அவர்களை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன் அமைதியும், நல்ல அன்பாகவும் பழகவும் கூடியவர், என்று நடிகர் ரஜினிகாந்த் காணொளியில் தெரிவித்திருந்தார்.