ADMK: போயஸ்கார்டன் ரஜினி இல்லத்தில் பன்னீர் செல்வம் திடீரென்று சந்தித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்பதுதான் காரசார விவாதமாக தற்சமயம் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளதால் தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் என இரு பக்கமும் தங்களது வாதத்தினை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியோ தேர்தல் ஆணையம் உட்கட்சி வழக்குகளில் தலையிட முடியாது அதற்கு அதிகாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் சில வரைமுறைகளுக்கு மாறாக தன்னை வெளியேற்றம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிமுகவின் ஆவணத்தின் படி இரட்டை இலை சின்னத்தை என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அதேபோல நிலுவை வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள பொழுது எப்படி இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி உபயோகிக்க முடியும்.
அதன் அதிகாரத்தை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நேற்று திடீரென்று ரஜினியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இது குறித்து கேட்ட பொழுது, எங்களது சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்று, வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இது ஒரு அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் பக்கம் வரும் வேளையில் ரஜினி இவர்களுடன் இணைவார் என்று பேசுகின்றனர். ஆனால் அரசியலே வேண்டாம் என்று சென்றவர் மீண்டும் இதில் நுழைய வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.