Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

Doubt is the release of Annatha movie ?? Heartbroken crew !!

Doubt is the release of Annatha movie ?? Heartbroken crew !!

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தது மக்களை அதிகம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இதுவரை 162 படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்குகிறார். இவர் நடிக்கும் அனைத்து மொழி திரைப்படத்திற்கும் அந்தந்த மொழி ரசிகர்களை கவர்ந்து உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.

மேலும் அண்மையில் வெளியான இவரின் தர்பார் திரைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். மேலும் அந்த படமும் தமிழ் தெலுங்கு இந்தி போன்ற மூன்று மொழிகளில் வெளியானது. தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன் என கலந்து ஒரு மாஸ்ஸான திரைப்படமாக உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு குழு கூறுகிறது.

மேலும் இந்த படத்தில் ரிலீஸ் தேதி வெளியான நிலையிலும் இன்னும் சில காட்சிகள் உருவாக்கப்படாமல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டாவது கொரானா அலை பரவியபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் இவர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார். அந்த சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார். இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் சில காட்சிகள் படமாக்கப்படமல் இருப்பது தெரியவந்துள்ளது.தற்போது அந்த காட்சிகளை எடுக்க கொல்கத்தா செல்ல உள்ளனர். மேலும் இன்னும் இருபது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என்று படப்பிடிப்புக் குழு அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version