Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

#image_title

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை! 

அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த
பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர்.

தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள தனியார் ஹோட்டல்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவியிடையே வாய் சண்டை நடந்துள்ளது. சண்டை அதிகாலை வரை தொடர்ந்துள்ளது இந்நிலையில், கணவன் ஆத்திரமடைந்து மனைவி பிரியாவை வீட்டில் வைத்திருந்த கத்தியால் கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒகேனக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பெயரில் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து கணவன் தங்க ராஜை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version