என்னுடைய கனவை இவர் நிறைவேற்றுவார் என அப்துல் கலாம் பாராட்டிய தமிழக அரசியல்வாதி

0
929
Dr Abdul Kalam Speech About Anbumani Ramadoss

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.இவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போதும், மத்தியில் குடியரசு தலைவராக  பதவி வகித்த போதும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் இந்தியா 2020  ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும் என  தன்னுடைய கனவையும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்து வந்தார்.

இவ்வாறு இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்ட அப்துல் கலாம் அதற்கான தன்னுடைய கனவுகளில் ஒன்றை இவர் நிறைவேற்றுவார் என தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியை பாராட்டியுள்ளார் என்பதை இந்நாளில் நினைவு கூறுவோம்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல்கலாம் அவர்கள் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் அவர்களை தன்னுடைய  கனவை இவர் நிறைவேற்றுவார் என்று பாராட்டியுள்ளார்.

அந்த விழாவில் பேசிய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் அன்புமணி ராமதாஸ் குறித்து கூறியதாவது” மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றும் அன்புமணி ராமதாஸ் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் பதவி வகித்த இந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய பணிகளை செய்துள்ளார். இந்த அளவுக்கு சுறுசுறுப்பாக உள்ள அமைச்சரை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் தருவதற்காக தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். இந்நிலையில் மக்களாகிய நாம் அதை பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Abdul Kalam with Anbumani Ramadoss

மேலும் அவர் புகையிலை மற்றும் மது ஆகியவற்றை ஒழிக்க மிகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.அன்புமணி ராமதாஸ் செயல்படுத்திய தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனக்கென்று ஒரு கனவு உண்டு இந்த கனவானது எல்லாச் சிற்றூர்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு 100 சதவீத மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான். அதற்காக 100% பயிற்சி பெற்ற மருத்துவர்களை அங்கு பணி அமர்த்த வேண்டும். என்னுடைய இந்த கனவை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதியாக நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று அவர் அப்போது தெரிவித்தார்.