Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு அவ்வப்போது பல நல்ல யோசனைகளையும், அரசின் திட்டங்களில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டியும், வருகின்றார்.

அந்த விதத்தில் அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதியில் விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டி இருக்கக்கூடிய ஆழ்கடல் பகுதியில் 8708 சதுர மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலம் கோரியிருக்குறது.

இவற்றில் தமிழகத்திற்கான திட்டம் தேவையில்லாதது தமிழகத்தில் ஏற்கனவே 7 ஆயிரத்து 264 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஐந்து உரிமங்களை மத்திய அரசு வழங்கியிருக்கிறது, இவற்றில் பெரும்பாலானவை காவிரி பாசன மாவட்டங்களில் இருக்கின்றன அவற்றை செயல்படுத்த பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்திருக்கிறது புதிதாக மேலும் பல திட்டங்கள் தேவை இல்லை அந்த திட்டம் ஆழ்கடலில் செயல் படுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் நிலப்பரப்பிலும் இருக்கும் அது காவிரிப்படுகையில் விவசாயத்தை பாதிக்கும் இதன் காரணமாக, புதிதாக அறிவிக்கப்பட்ட இருக்கின்ற காவிரி பேசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version