Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதனை உடனே தடை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாக சென்னை கோயம்பேட்டை சார்ந்த தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

கோயம்பேடு தினேஷ் கடந்த ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்திற்கு பலியாகும் 12வது நபர் இணையதள சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் நாள்தோறும் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதும், வாடிக்கையாக நடைபெற்று வரும் ஒன்றாகிவிடும் என கூறியிருக்கிறார்.

இணையதள சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு இனியும் தாமதம் செய்யக்கூடாது இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த இணையதள பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version