Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறும் கொடூரம்! உடனடியாக சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மிக விரைவாக அமல்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டம் சேந்தனுரை சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் இணையதள சூதாட்டத்தில் பல ஆயிரம் ரூபாயை இழந்து விட்ட காரணத்தால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கு இந்த சட்டத்தை நீக்கப்பட்டு இருப்பதால் மறுபடியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற தொடங்கி இருப்பது வேதனை தருகிறது என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இணையதள சூதாட்டங்களின் விளைவுகள் மற்றும் அதனால் ஏற்படும் துன்பங்கள் அதன் காரணமாக, நிகழும் தற்கொலைகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, சென்ற ஆட்சிக்காலத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இருந்தாலும் இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இணையதளத்தில் பார்த்த தடை சட்டம் நீக்கப்பட்ட உடனேயே இணையதள சூதாட்டத்திற்கு பொதுமக்கள் அழைக்கப்படும் விளம்பரங்களில் இருந்து விலகிய 16 தினங்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, நிலைமையின் தீவிரத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இனி இணையதள சூதாட்டத்திற்கு பொதுமக்கள் யாரும் இரையாக வேண்டாம் இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கின்றார்.

இளைஞர் பச்சையப்பன் தற்கொலை அடுத்தவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும், தமிழக இளைஞர்கள் யாரும் இணையதள சூதாட்டம் என்ற வலையில் சிக்கிக் கொள்ளாமல் கல்வி வேலைவாய்ப்பு குடும்பப் பொறுப்புகளின் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

Exit mobile version