தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

0
90

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் தற்சமயம் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன .ஆனாலும் வாணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு தமிழக மக்களையும் மதுவிற்கு அடிமையாகி வைத்திருக்கிறது தமிழக அரசு என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

நோய்தொற்று நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரத்து 200 கோடியை இந்த மாதத்தில் தமிழக அரசு வழங்க இருக்கிறது. ஆனால் ஒரு நாளைய டாஸ்மாக் வருமானம் 165 கோடி அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்தில் 5000 கோடியை பொதுமக்களிடமிருந்து மதுவை கொடுத்து தமிழக அரசு பறித்துக் கொள்கிறது .ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

பொதுமக்கள் நோயில்லாமல், குடும்ப தகராறு எதுவும் இல்லாமல், நிம்மதியாக வாழ்வதற்கு மிகச்சிறந்த வழி மதுக்கடைகளை மூடுவதுதான். இதனால் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை உடனடியாக மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.