Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்றல! வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை  காட்டுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி அட்டாக்!

Dr Krishnasamy

Dr Krishnasamy

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்ற வழியில்லை என்பதால், வெள்ளை அறிக்கை மூலம் திமுக அரசு வேடிக்கை  காட்டுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விமர்சகர்கள், பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக்கில், வெள்ளை அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அது புஷ்வாணமாகவே முடிந்து போய்விட்டது.
வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது.
திமுக, தங்களின் கையாலாகாத தனத்திற்கு அதிமுக-பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். வெள்ளை அறிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் கூறிய காரணங்களையும், கடன் ஏற்பட்டது எப்படி? தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் இருக்க திமுக அரசு என்னென்ன செய்யப் போகிறது? கூடுதல் வரி விதிப்பு, பேருந்து மின் கட்டண உயர்வு போன்றவை இருக்குமா என்பது குறித்து தனது அறிக்கையில் டாக்டர் கிருஷ்ணசாமி விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exit mobile version