தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பதில்!

0
224

கடந்த 2 ஆண்டு காலமாக நாடு முழுவதும் நேற்று பரவலாக அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்த நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர்.

மத்திய, மாநில, அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக, இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டது. இதனால் நோய் தொற்று மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது.

நோய் தொற்று குறைந்து வந்த சூழ்நிலையில், திடீரென்று சமீபத்தில் மீண்டும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, அனைவரும் மீண்டும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும், கோரிக்கை வைத்தார்கள். அதோடு முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை கிண்டி கிங்க்ஸ் நோய்தொற்று மருத்துவமனையில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது,

சென்னை ஐஐடியில் தொடர்ந்து நோய் தொற்று கட்டுப்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. ஐடியில் நேற்று முன்தினம் வரை 29 ஆக இருந்த நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது 111 ஆக அதிகரித்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அந்த விதத்தில் 32 பேருக்கு நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலுள்ள 7490 மாணவர்களில் 3,080 பேருக்கு நோய் தொற்று பரவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்து இருக்கிறார்.

அத்தோடு தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தற்போது நோய்த்தொற்று பரவல் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார் அவர் ஒன்பது மாவட்டங்களில் மிக குறைவாகவே நோய்த்தொற்று காணப்படுகிறது, மேலும் 1,4800000 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.

உடனடியாக தகுதியான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் தமிழகத்தில் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை காணப்படவில்லை, அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

தர்மபுரி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் 1000 பேரில் 3 பேருக்கு மட்டுமே நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. பொது இடங்களில் கவசம் அணிவது, தடுப்பூசிசெலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல் படுத்துவதற்கும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உருக்கமான சூழ்நிலை தற்போது ஏற்படவில்லை. ஆகவே ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு வருவதற்கான வாய்ப்பில்லை, ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனைகளில் இதுவரையில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையிலிருக்கிறது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.