Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு 5000 வழங்குக! மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்ற நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இருந்து இடைக்கால நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்

மத்திய அரசு அமைத்த மத்திய குழுவை சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக, 4 ஆயிரத்து 620 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண நிதி குறித்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

அதைவிடவும் கவலை தரும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை, வெள்ள, பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்த மத்திய குழு அதன் அறிக்கையை கூட மத்திய அரசிடம் இன்னும் தாக்கல் செய்ததாக தெரியவில்லை. தமிழக அரசு கோரிக்கை வைத்தபடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுவை டில்லிக்கு அனுப்பி தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை மிக விரைவாக பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை,வெள்ளம், காரணமாக, பாதிக்கப்பட்ட எல்லா குடும்பங்களுக்கும் தமிழக அரசு தலா 5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Exit mobile version