Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டாவை காட்டினால் போதுமா? மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் நெத்தியடி கேள்வி

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

பட்டாவை காட்டினால் போதுமா? மூல ஆவணங்கள் எங்கே? ஸ்டாலினுக்கு ராமதாஸ் நெத்தியடி கேள்வி

கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் எழாம் பொருத்தமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் வெளி வந்த நடிகர் தனுஷ் நடித்த அசூரன் படம் குறித்தும்,அதில் வருவது போல பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்தும் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிவிட்டிருந்தார்.

ஸ்டாலினின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் திமுகவின் பத்திரிக்கையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது,முடிந்தால் அதை முதலில் மீட்க முயற்சியுங்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் குற்றசாட்டை மறுக்கும் வகையில் முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.நிரூபிக்க தவறினால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அரசியலை விட்டு விலக தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலினின் இந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த நிலத்திற்கு மூல ஆவணம் எங்கே என நெத்தியடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தற்போதைய “வைரல்” ட்விட்டர் பதிவு..!!

1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

2.முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

4. நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!

Exit mobile version