தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ்

0
219
Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today
தலைவர்களின் சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? ஆதாரத்துடன் வெளுத்தெடுக்கும் மருத்துவர் ராமதாஸ்
கடந்த காலங்களில் திமுகவின் செயல்பாடுகளை தீவிரமாக எதிர்த்து வந்த கட்சிகளில் பாமக தான் முதன்மையானது.பாமகவின் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுக தலைமை சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு நீடித்து வந்தது.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாமக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்கு குறைந்து வந்தது.திமுக அழைத்த அரசு விழாவில் எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்த நிலையில் கூட்டணியில் உள்ள பாமக பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக பள்ளிகளில் வழங்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் உள்ள அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிபெயர்களை நீக்கி தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டது.இதற்கு காரணமாக புதியதாக அத்துறைக்கு பதவியேற்ற திண்டுக்கல் லியோனி காரணமாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அவர் முந்தைய அதிமுக அரசு தான் இதை ஆரம்பித்து வைத்தது என விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் இதையடுத்து உடனே அறிக்கை விட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சாதியை ஒழிக்க அரசு எடுத்த இந்த முயற்சியை பாராட்டுவதுடன் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் இருப்பதை சாதியாக பார்க்க கூடாது,அது அவர்களின் அடையலாம் என சுட்டி காட்டியிருந்தார்.
இதனையடுத்து அந்த காலத்தில் குறிப்பிட்ட அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் அடையாளமாக சாதியை இணைத்து எழுதியுள்ளதை ஆதாரமாக காட்டி தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் சி. இராஜகோபாலாச்சாரி அவர்கள் குறித்து வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருமுறை இருந்தவர் சி. இராஜகோபாலாச்சாரி. அது தான் அவரது இயற்பெயர். அப்படித் தான் அவர் கையெழுத்தும் போடுவார். அவ்வாறு இருக்கும் போது சாலைகளில் பெயர்களில் அவரது பெயரை ராஜாஜி என்று சிதைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது?
இதற்கு முன் உ.வே.சாமிநாத அய்யர் 28.02.1924-இல் வெளியிட்ட பிரகடனத்தை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் ’’பிள்ளை’’ அவர்கள், பெரியார் ஈ.வெ.ராமசுவாமி ’’நாயக்கர்’’ அவர்களுக்கு எழுதிய கடிதத்தையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஆதாரங்களை வெளியிட்டு தலைவர்களின் அடையாளமாக இருந்த சாதிப் பெயரை நீக்க அதிகாரம் கொடுத்தது யார்? என கேள்வியெழுப்பியுள்ளது தமிழக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து தமிழக முதல்வர் விளக்கமளிப்பரா? என்றும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.