கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

0
172

கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்  தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக படைப்பாளிகள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். அதில் டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிக்கையுடைய நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான். 

அப்போது  தம்பி இந்த கேள்விக்கு ஏற்கனவே நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய். 

இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் அப்போது மரத்தை வெட்டுபவன் என்பதற்கு பதில் மனிதனை வெட்டுவதை பற்றி கேளுங்கள் என்று பதில் அளித்தாக கடும் கோபத்துடன் கூறினார்.

மேலும் தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் கடும் சொற்களை கொண்டு விமர்சித்தவர், ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, நான் வைத்த மரத்தை வந்து பாருங்கள் என்கிறேன். ஒரு வருஷமாக இது வரை எந்த நாயும் பார்க்கவில்லை என்றார்.மரத்தை வெட்டியதை பற்றி மட்டும் பேசும் நீங்கள் நான் மரம் வைத்ததை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன்,தமிழக மக்கள் அனைவருக்காகவும் தான் இந்த ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறான் என்றும் ஊடகங்களின் அரசியல் சார்புடைய செயல்களையும்,நடுநிலை தவறி செயல்படுவதையும் சுட்டி காட்டி பேசினார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது நடுநிலை தவறி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் பத்திரிக்கையாளர்களை குறிப்பிட்டு தான் என்பதை மறைத்து அவருக்கு எதிராக பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக கண்டம் பதிவு செய்யப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பத்திரிக்கையாளர்களை கண்டித்து மருத்துவர் ராமதாஸ் பேசியது தவறு என பின்வாங்குவார் என்று பெரும்பாலான ஊடகங்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் அடுத்து நடந்த வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை நடத்திய நிகழ்ச்சியில் தான் பேசியது சரி தான் என்று எப்போதும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிப்படுத்தினார்.

பத்திரிக்கையாளர்கள் தெரிவித்த கண்டனத்தையடுத்து மருத்துவர் ராமதாஸ் அவர் பேசியதிலிருந்து பின்வாங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ஊடகங்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. கடந்த கால அரசியலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சி என்று கூட பார்க்காமல் தவறு என்றால் உடனே சுட்டி காட்டுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதே போல தான் தற்போது ஊடக அறம் தவறிய ஊடகங்களுக்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

யார் கண்டனம் தெரிவித்தால் எனக்கென்ன என பாமக நிறுவனர் ராமதாஸ் கெத்தாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது ஊடகங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.