Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிகுந்த மன வேதனையுடன் மருத்துவர் ராமதாஸ் போட்ட ட்வீட்!

ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் நோய்த்தொற்று காரணமாக இன்று இயற்கை எய்தினார். அஜித் சிங் முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார் இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , நரசிம்மராவ் ஆகியோரின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார் இவருக்கு மனைவி மற்றும் மகன் மற்றும் மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் ஜெயம் சௌந்தரி மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

அஜித் சிங் நோய்தொற்று பாதிப்பால் கடந்த ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி குருகிராம் மருத்துவமனைகள் அனுமதிக்கபட்டு தொடர்ச்சியாக சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மறைவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில், முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங் காலமானார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கட்சித் தொண்டர்களுக்கு என்னுடைய இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

Exit mobile version