சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.மின்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இவர் துறை சார்ந்த பணியை கவனிக்கிறாரோ இல்லையோ சேலம் மாவட்டத்தில் திமுகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை உதாரணமாக காட்டி விமர்சித்து வந்தனர்.அதில் முக்கியமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டும் உதாரணமாக கூறி அதிக அளவில் விமர்சிக்கபட்டது.
இந்நிலையில் எதிர்கட்சிகள் விமர்சித்த மாதிரியே திமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களிலே தமிழத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட ஆரம்பித்தது.தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் சில மணி நேரங்களாவது மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தது போலவே திமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது பொது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது சில இடங்களில் செடி வளர்ந்து கம்பியின் மீது மோதுவதாலும்,மின்கம்பியின் மீது அணில்கள் ஓடுவதாலும் கம்பிகள் உரசி கொள்வதால் மின்தடை ஏற்படுவதாக கூறியுள்ளார்.
அமைச்சர் அளித்த இந்த பதிலுக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.அந்த வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும் அமைச்சரின் பதிலை விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்!
https://twitter.com/drramadoss/status/1407258100705366032
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? என்றும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/drramadoss/status/1407258103641305088